Breaking News

முடக்கப்பட்ட பிரதேசம் திங்கட்கிழமை திறக்கப்படும்?

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று (22) 4 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை செய்திருப்பதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, இந்தப் பரிசோதனை, கடந்த 2021.01.18 ஆம் திகதி நான்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட  எகுதார் நகர் கிராம சேவகர் பிரிவில் உள்ளவர்களுக்கே மேற்கொண்டிருந்தோம். இதில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் முடக்கப்பட்டுள்ள மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் உள்ள 26 நபர்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அவை, PCR பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் வீழ்ச்சியடைந்து வருவதால், முடக்கப்பட்ட மாஞ்சோலை கிராமத்தை எதிர்வரும் திங்கட் கிழமை திறப்பதற்கான சாதக நிலைமை ஏற்பட்டிருப்பதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி நியூஸ் டைமுக்கு தெரிவித்தார். 


No comments