குறிஞ்சாக்கேணி சுகாதார பிரிவில் ஒருவருக்கு கொரோனா!
(கியாஸ் ஷாபி)
குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று (17.01.2021) 16 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா அன்டிஜென் பரிசோதனையில் ஒருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார் என குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் A.M.M.அஜித் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்றைய பரிசோதனைக்கு கிண்ணியா சுகாதாரப் பிரிவில் தொற்றுக்குள்ளாகியிருக்க்கின்றவர்களின் உறவினர்கள் மற்றும் இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் இனங்காணப்பட்டு, அவர்கள் அன்டிஜென் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறோம்.
இந்த நிலையிலே, இன்று, குறிஞ்சாக்கேணியில் 8 பேரும் ஆயிலயடியில் 5 பேரும் வட்மடுவில் 3 பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, பெரிய கிண்ணியாவை வசிப்பிடமாகக் கொண்ட பெண் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், 7 நபர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறோம்.
இதேவேளை, இந்தப் பிரதேசத்தில் டெங்கு நோய் தடுப்புக்காக, பல முற்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்தார்.







No comments