உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும்.
கொவிட் தொற்றுக்கு மத்தியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, உயர்தர பரீட்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி – மல்வத்து அஸ்கிரிய விஹாரைகளின் விஹாராதிபதிகளிடம் இன்று ஆசிப் பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்படடுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடத்தப்படும் சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை ஜுன் மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25ம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்






No comments