Breaking News

அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் மகிழ்ச்சியான தகவல்





வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விமான சேவைகளின் எண்ணிக்கை எதிர்வரும் வாரம் முதல் அதிகரித்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டிற்கு அழைத்து வரப்படும் அனைத்து இலங்கையர்களையும், அரசாங்கத்தினால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அழைத்து வரப்படும் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவது கட்டாயமானது அல்லவென நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்

No comments