Breaking News

புல்மோட்டை கடற்கரையில் ஒதுங்கிய ஆணின் சடலம்!




திருகோணமலை, புல்மோட்டை -ஜின்னா நகர் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று இன்று ( 12 ) மாலை கரையொதுங்கியுள்ளது.

வெள்ளை நிறத்திலான கட்டக் கை சேட் அணிந்துள்ளதாகவும், 45 வயது மதிக்கத்தக்க நபராவார். இருப்பினும் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 

கரையொதுங்கிய சடலம் திருகோணமலை பொதுவைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை புல்மோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments