ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி.

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் மட்டக்களப்பு ஊடகவியலாளர் குகராசு சுபோஜன் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
ஏறாவூர் பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரமொன்றை அமைப்பதற்கு எதிராக நேற்று முன்தினம் (05) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை, அங்கிருந்த சிலர் அச்சுறுத்தியுள்ளனர்.
அச்சுறுத்தல் விடுத்ததை தொடர்ந்து, ஊடகவியலாளர் வசமிருந்த கமராவை பறிப்பதற்கு பல சந்தர்ப்பத்தில் முயற்சித்துள்ளதாக ஊடகவியலாளர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தன்னால் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை அழிக்குமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் அச்சுறுத்தல் விடுத்ததாக குறித்த ஊடகவியலாளர் தெரிவிக்கின்றார்
இந்த நிலையில், தன்மீதான அச்சுறுத்தல் குறித்து ஊடகவியலாளர் குகராசு சுபோஜன் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.






No comments