Breaking News

நாட்டில் 46,000 ஐ கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை!





இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 46,000 ஐ கடந்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினத்தில் (6) இதுவரை 521 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எணணிக்கை 46,247 பேராக உயர்ந்துள்ளது.

அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,498 ஆக அதிகரித்துள்ளது

No comments