கொரோனா தடுப்பூசி போடலாமா?
உலகில் 55 மருந்து நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியை கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளன.
இருந்தபோதிலும் WHO, அமெரிக்காவின் FDA, அந்தந்த நாட்டு Drug Regulators போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி, நடைமுறைக்கு வந்துள்ள சில VACCINE கள் பற்றி பார்ப்போம்.
America,Germany கூட்டுத் தயாரிப்பு
Pfizer என்பது America,Germany கூட்டுத் தயாரிப்பு ஆகும். இது கொரோனா Virusஇற்கு எதிராக 95% செயல்படக்கூடியது.
mRNA genetic முறை மூலம் இது தயாரிக்கப்பட்ட Vaccines ஆகும். மைனஸ்70’Cஇல் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த, Moderna என்ற Vaccines கொரோனா Virus இற்கு எதிராக 94.5% செயல்படக்கூடியது.
mRNA genetic Material முறை மூலம் தயாரிக்கப்படும் Vaccines ஆகும். மைனஸ் 20’Cல் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Covishied - இந்திய தயாரிப்பு.
Oxford பல்கலைகழகமும், AstraZeneca நிறுவனமும் இனைந்து தயாரித்தது.
கொரோனா Virus இற்கு எதிராக 62-90% செயற்படக்கூடியது.
Corona Virus இன் இறந்த உடல்களை கொண்டு(Killed Vaccines) தயாரிக்கப்படுகின்றது.
மைனஸ் 2’C to 8’c இல் பாதுகாக்கப்படவேண்டும்.
நான்கு வார இடைவெளியில் இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
COVAXIN - இந்திய தயாரிப்பு
SPUTNIK -V - ரஷ்யா தயாரிப்பு
NOVAVAX - அமெரிக்கா தயாரிப்பு
Vaccines செயற்படும் விதம்.
vaccines எங்களின் உடல்களில் செலுத்தப்பட்ட பின்னர், அது எம் உடலில் குறிப்பிட்ட அந்த நோய்க்கான (virus/Bacteria) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதன் மூலம், அந்த நோயில் இருந்து பாதுகாப்பை பெறச்செய்கின்றது (Antibody உருவாக்கத்தின் மூலம்)
Vaccines பயன்பாட்டுக்கு வரும் விதம்
பொதுவாக வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து அதை மக்கள் பயண்பாட்டுக்கு கொண்டுவருவது மிகவும் சிக்கலான, அதே சமயம் “அதிக காலம்” எடுக்கும் பணி, தடுப்பூசியை உருவாக்கியதும், அதை விலங்குகளிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.
பின்னர் மனிதர்களை(தன்னார்வலர்கள்) வைத்து “மூன்று கட்ட” சோதனைகள் நடாத்தி, அவற்றில் நல்ல முடிவுகள் கிடைத்திருக்க வேண்டும்.
போதிய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது,மோசமான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை, இது பாதுகாப்பானதுதான்,என ஆய்வு முடிவுகள் உறுதி செய்தால்தான் அனுமதி கிடைக்கும்.
இது நீண்ட காலம் சோதனை செய்து கண்காணிக்க வேண்டிய பணி.
Pfizer, Moderna Vaccine ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதும், திறன்பட செயற்படக்கூடியதாக இருந்தபோதிலும் விலை உயர்ந்ததாகவும், பாதுகாத்து வைத்திருப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களாலும் எமது நாட்டில் வழங்கப்பட வாய்ப்பில்லை.
இன்றுமுதல் எங்கள் நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு,அதன் அன்டை நாடுகளுக்கு வழங்கிய Covishield/Covaxinகள் வழங்கப்படவுள்ளன.
இது விலை குறைந்ததாகவும்,பாதுகாத்து வைப்பதில்(சாதாரன Refrigerator) நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமையாலும் வழங்கப்படுகின்றது.
இந்திய தயாரிப்பான (Covishield/Covaxin)Vaccine
(1).கொரோனா Virus இற்கு எதிராக செயற்படும் அளவு 62% to 90%.
(2).நீண்ட காலப் பக்கவிளைவுகள் பற்றிய போதிய தரவுகள் இன்மை(Incompletely Studied Vaccines)
(3).கர்ப்பினி பெண்களுக்கும்,பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்கமுடியாது. ஆதலால், இதன் பயன்பாடு பற்றி பல விவதாங்கள் எழுந்துள்ளதையும் அவதாணிக்க முடிகின்றது.
எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி:- கொரோனா தடுப்பூசி போடலாமா?வேண்டாமா?
இந்த கேள்விக்கு ஆம்/இல்லை என்று சொல்வதைக் காட்டிலும் “போட்டால் நல்லம்” என்று சொல்வதே இப்போதைக்கு சரியானதாகும்.
“இறந்தால் எரிக்கப்படுவதை காட்டிலும் நல்லதே”







No comments