Breaking News

கிண்ணியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் ?



 (கியாஸ் ஷாபி)

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று (19) 73 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை செய்திருப்பதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, இந்தப் பரிசோதனை, நேற்று (18) நான்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட எகுதார் நகர் கிராம சேவகர் பிரிவில் உள்ளவர்களுக்கே மேற்கொண்டிருந்தோம். இதில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த நிலை இப் பிரதேசத்தில் நல்லதொரு சமிக்ஞையைக் காட்டியிருக்கிறது. இன்னும் சில தினங்களில், ஒரு கொத்தனியாக இருக்கின்ற தொற்றினை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


No comments