Breaking News

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு.

 

(கியாஸ் ஷாபி)

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எம்.கிறிஸ்டிலால் பெர்னாண்டோ திருகோணமலையில் அமைந்துள்ள அலுவலகத்தில்இன்று (5) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தினை உடைய இவர்இதற்கு முன்னர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியவராவார். 

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஐ.கே.ஜி.முத்துபன்டா  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையை அடுத்து, இவர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


No comments