கிண்ணியாவில் மேலும் இருவருக்கு கொரோனா!!
கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குறிஞ்சாக்கேணி சுகாதார பிரிவில் இன்று மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ.அஜீத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கச்சக்கொடித்தீவு, வில்வெளி ஆகிய இரு இடங்களிலும் இன்று (6) எழமாறாக 45 பேருக்கு அன்டிஜென் பரிசோதனையை மேற்கொண்ட போதே, இந்த இருவரும் அடையாளம் காணப்பட்டனர். இருவரும் மோட்டார் வாகான திருத்தம் செய்யும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களாகும்.
இவர்கள், கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட அண்ணல் நகர் மற்றும் குட்டிக்கராச் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால், இவர்களுடைய முதல் தொடர்பாளர்கள் குறித்து அவதானத்தைச் செலுத்துமாறு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறோம்.
அத்தோடு, இவர்கள் வேலை செய்த இடத்தோடு, சம்மந்தப்பட்டவர்கள் 15 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்ட போதும், அதில் எவரும் தொற்றாளராக இனங்காணப்படவில்லை. எனினும் அவர்களை தனிமைப்படுதலுக்கு உட்படுத்தியிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.






No comments