Breaking News

பட்டதாரி பயிலுநர்களை அரச நிறுவனங்களில் இணைப்புச் செய்தல்.

மூதூர் பிரதேச செயலகத்தில் புதிதாக இணைப்புச் செய்யப்பட்டுள்ள பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரி பயிலுநர்களை அரச நிறுவனங்களில்  மற்றும் அரச பாடசாலைகளில் பயிற்சிக்காக இணைப்புச்செய்வதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(2021.01.06) காலை ஆரம்பிக்கப்பட்டது. 

கொரொனா பாதுகாப்பு வழிமுறைகள் பேணப்பட்டு கட்டம் கட்டமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்  M. B. M.முபாறக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் P.அறபாத் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் A.அலாவுத்தீன் ஆகியோர் கலந்துகொண்டு பயிலுநர்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்தல்களை வழங்கினர். 


 


No comments