Breaking News

PCR பரிசோதனையின் முடிவுகள்.

 


(கியாஸ் ஷாபி)

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இருந்து கடந்த 2021.01.02 ஆம் திகதி அனுப்பப்பட்ட 15 பேரின் இரத்த மாதிரிக்கான  பி.சி.ஆர் பரிசோதன அறிக்கை இன்று கிடைத்திருக்கிறது. எனினும் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, இந்தப் பரிசோதனை, இங்கு வியாபாரம் செய்கின்ற வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கும் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த சிலருக்கும் செய்யப்பட்டது என்று தெரிவித்த அவர்,

2021.01.03 ஆம் திகதி 14 பேரின் இரத்த மாதிரிகள் P.C.R.பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. இதனுடைய முடிவுகள் இன்று மாலை கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் குட்டிக்கராச், அண்ணல் நகர் பிரதேச வாசிகளும் மற்றும் பிரதான வீதியைச் சேர்ந்த வர்த்தகர்களுமே இதில் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.



   





 



No comments