தம்பலகாமம் பிரதேச செயலக ஊழியர்களின் உறுதி மொழி
(ஹஸ்பர் ஏ.ஹலீம்)
2021 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை மக்களுக்காகச் செய்வோம் என்ற தொனிப்பொருளில் தம்பலகாமம் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று தங்களது கடமைகளை ஆரம்பித்தனர்.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் தேசிய கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், தேசத்திற்காக உயிர்தியாகம் செய்தவர்கள் அனைவரையும் நினைவுகூர்வதற்காக 2 நிமிட மெளன அஞ்சலியும் அதன்பின்பு அரசசேவை சத்தியப்பிரமாணமும் இடம் பெற்றதோடு, சர்வமத ஆசிர்வாதத்துடன் அனைவருக்கும் இனிப்பு பண்டங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.






No comments