Breaking News

கிண்ணியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஐ எட்டியது.

 

(கியாஸ் ஷாபி)  

கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார். இதன்மூலம் கிண்ணியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஐ எட்டியிருக்கின்றது.

பெரிய கிண்ணியா கிராம சேவகர் பிரிவின் அடப்பனார் வயல் பகுதியைச் சேர்ந்த திருகோணமலை நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு  PCR பரிசோதனையின் மூலம் நேற்று(1) கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த தொற்றாளரோடு, பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த, இலங்கையின் இரண்டாவது கொரோனா அலைக்குப் பின்னர் இந்த பிரதேசத்தில்   கொரோனா தொற்றாளர்களர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



 



No comments