குறிஞ்சாக்கேணியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவருக்கு கொரோனா!
(கியாஸ் ஷாபி)
குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட நடுஊற்று கிராம சேவகர் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர் என குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் A.M.M.அஜித் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கிண்ணியா நடுஊற்று கிராம சேவகர் பிரிவில் உள்ள ஒரு குடும்பஸ்தர், வெளிநாடு செல்லுவதற்காக கொழும்பில் PCR மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது, இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக எமக்கு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரது முதன் நிலை தொடர்பாளர்களை அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, மேலும் 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த குடும்பத்தைச் சேர்ந்த, மகாமாறு அலிகார் மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு இன்று (18) தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்த அவர், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இலங்கையில் பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த, 2 வது கொரோனா அலைக்குப் பின்னர் இந்த பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.






No comments