கணவனின் தாக்குதலில் காயமடைந்த மனைவி உயிரிழப்பு.
திருகோணமலை - லிங்கநகர் பகுதியில் கணவரின் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
55 வயதுடைய பெண்ணொருவரே சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (19)உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி 11:52 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் குறித்த பெண் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த கே.பரமேஸ்வரி (55 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (News Time Tamil)






No comments