Breaking News

மட்டக்களப்பில் நீர் வழங்கல் தொடர்பான நடமாடும் சேவை



மட்டக்களப்பில் நீர் வழங்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க இராஜாங்க அமைச்சர் சனத் நிசந்தவின் பங்குபற்றுதலுடன் நடமாடும் சேவை 

மட்டக்களப்பில் நீர் வழங்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் வழங்கள் திட்ட மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சனத் நிசந்தவின் பங்குபற்றுதலுன் நடமாடும் சேவை எதிர்வரும் திங்கள்கிழமை (15) நடைபெறவுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சருமாகிய சதாசிவம் வியாழேந்திரனின் வேண்டுகோளின் பேரில் இந்நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நடமாடும் சேவை மட்டக்ளப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரபிரதேச செயலகப் பிரிவுகளுக்குமாக மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (15) காலை 9.30 மணி முதல் 4.30 வரை இடம்பெறவுள்ளது.

இம்மாவட்டத்திலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்களின் நீர் வழங்கல் தொடர்பாக எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு இங்கு தீர்வுகள் வழங்கப்படவுள்ளன. இவற்றில் புதிய நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்தல், தனிநபருக்கு அல்லது குடும்பங்களுக்கான நீர் இணைப்பினைப் பெற்றுக் கொள்ளல், நீர் வழங்கல் திட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள், போதிய நீர் இன்மை, நீரின் தன்மையில் காணப்படும் பிரச்சினைகள், கட்டணப்பற்றுச் சீட்டில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் முகாமைத்தவத்தில் காணப்படும் பிரச்சினைகள் போன்றவற்றுக்கான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. 

இந்நடமாடும் சேவையினூடாக மாவட்டத்தின் சகல பிரதேசத்திலுமுள்ள மக்களும் நீர்வழங்கல் தொடர்பான தமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளமுடியுமென மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தெரிவித்தார்.

No comments