அடக்கம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் எப்போது?
கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய விரைவில் வெளியிடப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வென தெரிவிக்கின்றார்.
கண்டி − குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து சுகாதார பிரிவு ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் இது தொடர்பில் அறிந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்






No comments