அலிகார் மகா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா.
கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தில் முதலாம் வகுப்புக்கு சேர்ந்து கொண்ட புதிய மாணவர்களை வாழ்த்தி வரவேற்கும் வித்தியாரம்ப விழா, அதிபர் ஆர். சதாத் தலைமையில் இன்று (15) இடம்பெற்றது.
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் உளவளத்துறை ஆசிரிய ஆலோசகர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா, கிண்ணியா விவசாய உத்தியோகத்தர் A.W. அரூஸ், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.சாஜித் ஆகியோர் கல்விக்கான இந் நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
புதிய மாணவர்களுக்கு இன்றைய தினம் ஏடு துவக்கி வைக்கப்பட்டதோடு, ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









No comments