Breaking News

குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது ஏன்?

 


குழந்தைகளுக்கு மொட்டையடிப்பது ஏன்? 

ஒரு குழந்தை தன் தாயின் கருவைக்குள் இருக்கும் போது அதை ஒரு விதமான திரவம் சூழ்ந்து கொண்டு இருக்கும். அதை தான் நாம் பனிக்குடம் என்கிறோம். 

ஒரு கருவானது சில மாதங்களுக்கும் பின்னர் சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கிறது. அந்த சீறுநீர் ஆனது பனிக்குடத்தில் உள்ள நீருடன் கலந்து விடுகிறது.

இப்படிபட்ட ஒரு திரவத்தில் தான் குழந்தை பத்து மாதங்கள் தாயின் கருவில் ஊறி இருக்கும். அந்த குழந்தை இந்த பூமியில் பிறந்த உடன் துடைத்து நீக்கி அதன் உடலை நன்றாக துடைத்து சுத்தம் செய்து அதனை நீக்கி விடுவோம். ஒரு வேளை குழந்தை அந்நீரை குடித்து இருந்தால் அதன் உடல் தானாகவே அந்த திரவத்தை வெளியேற்றிவிடும். இதில் சிக்கல் என்னவென்றால் குழந்தையின் தலையானது பத்து மாதங்கள் அந்த திரவத்தில் ஊறி இருக்கும். அது அவ்வளவு எளிதாக வெளியில் வர வாய்ப்பில்லை. அது வெளியில் வர ஒரே வழி மயிர் கால்கள் மட்டுமே அதற்காக தான் குழந்தை பிறந்து சில மாதங்களில் மொட்டை அடிக்க சொல்லி நம் முன்னோர்கள் கூறி உள்ளனர்.

இவ்வாறு மொட்டை அடிப்பதன் மூலம் அந்த திரவமானது மயிர் கால்களின் ஊடாக தலையில் இருந்து எளிதில் வெளியாகி விடும் ஒரு வேளை மொட்டை அடிக்கா விட்டால் அந்த கழிவுகள் தலையிலேயே தங்கிவிடும். இது பிற்காலத்தில் தலைவலி , ஒற்றை தலைவலி மற்றும் தலை சம்மந்தப்பட்ட வேறு நோய்களுக்கு வழி வகுக்கும்.

மொட்டை அடிப்பதால் நன்மைகள்:நரம்புகள், ரத்த நாளங்கள் ஆகியவை தூண்டப்பட மொட்டை அடிக்கும் பழக்கம் உதவுகிறது.

குழந்தைக்கு பல் வளரும்போது மொட்டை அடிக்கலாம் எனும் பழக்கம் தொடர்கிறது. பல் வளர்ச்சி இருக்கும்போது உடல் அதிக வெப்பம் அடையும், தலை பாரமாக இருக்கும். இந்த தருணங்களில் மொட்டை அடித்தால், உடலில் உள்ள அசௌகரியத்தைக் குறைப்பதாக சொல்லப்படுகிறது.

மண்டைத் தோலில் உள்ள தொற்றுகள், பாதிப்புகள், பூஞ்சைகள் ஆகியவை மொட்டை அடிப்பதால் நீங்குகின்றன. இதனால் முடி வளர மிகவும் உதவுகிறது.

வெயில் காலங்களில் முடி எடுப்பதால், வியர்த்தலால் ஏற்படும் பிரச்னைகளும் தடுக்கப்படுகின்றன. மொட்டை அடித்த பிறகான சில காலம் வரை தலையைப் பராமரிக்க எளிது. பேன், தொற்றுகள் ஆகியவை இருக்காது




No comments