Breaking News

ஜமால் கசோஷியை கொல்வதற்கான உத்தரவை சவுதி அரேபிய இளவரசர் வழங்கினார்



ஜமால் கசோஷியை கொல்வதற்கான உத்தரவை சவுதி அரேபிய இளவரசர் வழங்கினார் – அமெரிக்கா

பத்திரிகையாளர் ஜமால் கசோஷியை கொலை செய்வதற்கான அனுமதியை சவுதி அரேபியாவின் இளவரசர்  முகமட் பின் சல்மான் வழங்கினார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையே இதனை தெரிவித்துள்ளது.

ஜோ பைடன் நிர்வாகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கசோஜியை உயிருடன் பிடிக்குமாறு அல்லது கொலை செய்யுமாறு இளவரசர் முகமட் பின் சல்மான் உத்தரவிட்டார் என அமெரிக்காவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளரை இஸ்தான்புலில் உயிருடன் பிடிப்பதற்கான அல்லது  கொலை செய்வதற்கான நடவடிக்கைக்கு சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் அனுமதி வழங்கினார் என நாங்கள் கணிப்பிட்டுள்ளோம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இளவரசர் இந்த நடவடிக்கைக்கான அனுமதியை வழங்கியிருப்பார் என தாங்கள் கருதுவதற்கான  மூன்று காரணங்கள் உள்ளன என அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

2017 முதல் சவுதி அரேபியா குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை இளவரசர் தன்னிடமே வைத்துள்ளார்.

பத்திரிகையாளர்களிற்கு எதிரான நடவடிக்கையில் இளவரசரின்  ஆலோசகர் ஒருவரும் அவரது பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களும் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள சவுதி அரேபிய அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இளவரசர் ஆதரவு வழங்கிவந்துள்ளார்.

இதன் காரணமாகவே ஜமால் கசோஜிக்கு எதிரான நடவடிக்கைக்கு இளவரசர் அனுமதி வழங்கியிருப்பார் என கருதுவதாக அமெரிக்க புலனாய்வு பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

- தினக்குரல் - 

No comments