இரண்டு வாகனம் ஒரே நேரத்தில் கிண்ணியா சலாம் ஹோட்டலுக்குள் நுழைந்து விபரீதம்!!
டிப்பர் வாகனம் ஒன்றும் மீன் லொறி ஒன்றும் ஒரே நேரத்தில் கிண்ணியா மட்டக்களப்பு வீதியில் உள்ள சலாம் ஹோட்டலுக்குள் நுழைந்து விபரீதம் ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இன்று (25) மாலை நிகழ்ந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்த போதுஇ அதனுடைய முன்பக்க டயர் ஒன்று வெடித்து சிதைவடைந்ததனால் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி குறித்த ஹோட்டலுக்குள் நுழைய முற்பட்ட போது அதனைப் பின் தொடர்ந்து வந்த மீன் லொறி ஒன்றின் சாரதி ஆபத்தில் இருந்து தப்புவதற்காக சாரதி கடும் பிரயத்தனம் செய்த போது அந்த லொறி ஹோட்டலுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தெய்வாதீனமாக அந்த இடத்தில் எவரும் நிற்கவில்லை என்றும் அவ்வாறு இருந்திருந்தால் பாரிய உயிச்சேதங்கள் ஏற்பட்டடிருக்கும் என்று நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.(News Time Tamil)








No comments