Breaking News

இந்திய பல்கலைக்கழகங்களில் திருமலை மாணவர்களுக்கு இலவச பட்டப்படிப்பு

 


இந்திய பல்கலைக்கழகங்களில் இலங்கையில் இருந்து இலவச புலமைப்பரிசில் பட்டப்படிப்பினை மேற்கொள்ளுவதற்கு தேவையான வழிகாட்டல்கள் வழங்கும் நிகழ்வு நேற்று பல பிரதேசங்களில் நடைபெற்றது.

க.பொ.த. உ/த பரீட்சை எழுதிய பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவ, மாணவிகளுக்காக இந்த புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

தெளிவூட்டல் தொடர்பான சந்திப்புக்களில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா, திருகோணமலை, நிலாவெளி, இரக்ககண்டி, குச்சவெளி, புல்மோட்டை ஆகிய பாடசாலை அதிபர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் ரோயல் டெக்னோ கெம்பஸ் அதிபர், M. அனஸ், சந்தைப்படுத்தல் முகாமையாளர், A. அப்ரிடி, விசா கன்சல்டன் N. ஜாவித், திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் A. A. றியாஸ் ஆகியோர்  கலந்து கொன்டனர். 

முற்றிலும் இலவசமான வழங்கப்படவுள்ள இப் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப முடிவுத் திகதி 20/03/2021 ஆகும். 

மேலதிக விபரங்களுக்கு +94761119823 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.(News Time Tamil) 





No comments