நாகரீகத்தின் சுதந்திரமும் அதிகார சுதேசிகளின் தேசத்துரோகமும்
தாய் தேசத்தின் 73 வது சுதந்திர நேரத்தில் இலங்கை அரசியல் சிவில் தலைமைகள் மற்றும் பிரசையினதும் கடமை குறித்த சுயவிமர்சனப்பார்வை
- ஏ.எம். ஹிதாயத்துள்ளாஹ் -
1948 சுதந்திரத்திர கற்றை சுவாசித்த போது நாம் கிழக்கு மற்றும் தென் கிழக்காசியாவில் ஜப்பானுக்கடுத்த ஜாம்பவானாக இருந்தோம்,
அன்று இந்தியர்கள் கள்ளத்தோணியில் ரூபாக்களை வாங்க நம் தாய் மண்ணில் கறை ஒதுங்கினர்(இலங்கையின் ஒரு ரூபா இரண்டு இந்திய ரூபாய்களுக்கு சமமாக இருந்தது)
"நாம் எப்போது ஸ்ரீலங்கா போன்று மாறுவது ?" என்று சிங்கப்பூரும் மலேசியாவும் வாய்பிழந்து நின்றனர்
இன்று உலக வல்லரசுக்காக போட்டிபோட்டு நிற்கும் சீனாவும் இந்தியாவும் தமது குடிமக்களுக்கு குடிசைகட்ட வழிதேடி தவித்து நின்றனர்.
ஐரோப்பியர்கள் இவ்வழகிய தீவின்கேந்திர முக்கியத்துவமறிந்து வாசனை திரவியங்களையும், இயற்கை துறைமுகங்களையும் விட்டுச்செல்ல மனமின்றி முள்கொப்பில் விழுந்த பட்டுத்துணியை இழுத்துச்செல்வதாய் காயங்களோடும் இரத்தங்களோடுமே பரிதவித்துசென்றனர்,
இருப்பினும் அபிவிருத்தியுடன் கூடிய நாகரீகமான நாட்டையே அவர்கள் விட்டுச்சென்றனர், அந்த சுதந்திரம் நாகதரீகத்துடன் கூடியதாய் காணப்பட்டது.
சுதந்திரத்தை பெற்று அதிகாரங்களுக்காக மாறி மாறி வரும் சுய நலசதிகார அரசுகளும் ஏன் சிறுபான்மை தலைமைகளும் கூட மக்களின் சிந்தனைகளை இனவாதம்,மதவாதத்திற்குள் திசை திருப்பி நாட்டு மக்களை பணவீக்கம், கடன் சுமை, இன முரன்பாடுகளுக்குள்ளும் சிக்கவைத்து தோல்விவி கண்டு செல்லும் நாடாய் இவ்வழகிய தீவினை நாசமாக்கிச்செல்வது எவ்வளவு ஆபத்தான தேசத்துரோகச் செயல்?
இப்படியே Once of on a time ஒரு காலத்தில் அப்படியிருந்தோம் இப்படியிருந்தோம் என்று எவ்வளவு காலம் வெட்கமிழந்து பேசிக்கொண்டிருக்கப் போகின்றோம் ?
முழு நாட்டு மக்களுக்கு முன்னாலுமிருக்கும் மிகப்பெரும் பொறுப்பினை உணர்ந்தாகவேண்டும்,நாம் அரசியல் அதிகார மயக்கம் தெளிந்து நாம் இழந்துவிட்ட நாகரீகத்தை மீட்டெடுக்க உறுதிபூணவேண்டிய தருணமிது,
நம் சந்ததிகளுக்கு கடன்சுமையற்ற நாட்டை ஒப்படைக்கவேண்டிய அமானிதத்தினை ஒவ்வொருவரும் உணர்ந்தாகவேண்டும்.
73 வது தேசிய தினத்தில் இனவாதம்,மதவாதம், அதிகாரவெறி உள்ளிட்ட நட்டை குட்டிச்சுவராக்கிய அடிமைத்துவங்களையெல்லாம் அறுத்தெறிந்து உண்மையான சுதந்திரத்திற்கான எட்டுக்களை உடன் வைப்பதே சுபீட்சத்தின் பாதை.
முஸ்லீம்கள் என்றவகயில் ஒரு தேசத்தில் அநாகரீகங்களும் அக்கிரமங்களும் தலைவிரித்தாடுகின்றதெனில் அத்தேசத்தின் நீதி நாகரீகத்தினை கட்டி எழுப்புவதில் நமக்குள்ள அதிக கடமை பொறுப்புணர்வுகளையே அது உணர்த்தி நிற்கின்றது.
நம் தாய்தேசத்து எழுச்சியின்மீது உண்மையான அக்கரறை கொள்வோம்.
நம் மணணின் சுபீட்சத்திற்காய் பிரபஞ்ச அதிபதியிடம் உருக்கமாய் விண்ணப்பம் செய்வோம்,
தேடசத்தை கட்டி எழுப்புவதில் அர்ப்பணிப்புமிக்க பங்காளியாவோம்.
நாட்டின் சட்டதிட்டங்களை மரியாதையுடன் ஏற்போம்..
நமதுஉரிமைகளுக்கான குரல்களும் சுதந்திரத்தின் நாதங்களும் ஒலிக்கட்டும் ஒரே நேரத்தில்.
அபூ ஜஹ்ல், அபூ லஹப்களின் அட்டூழியங்கள் நபியவர்களின் மக்கமா தாய் மண்ணின் மீதான அன்பிலும் அக்கறையிலும் அதிகரிப்பினையே ஏற்படுத்தின.
1948 களில் நாட்டிற்கிருந்த பிராந்திய ஸ்தானம் தற்போதுவரையான 73 வருட பயணத்தில்; கிடைதத சுதந்திரத்தினை நம்மை சுற்றியிருந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் நாம் இந்த தேசத்திற்கு இழைக்கப்பட்டுச் செல்கின்ற துரோக அக்கிரம கலாசாரத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதே நாட்டின் சகல இன மக்களதும் முதன்மையான அக்கறையாக மறுதல் வேண்டும்,
தேசத்தின்மீது உண்மையான அக்கறையுள்ள ஊடகங்களினதும் முழு நட்டு மக்களதும் கவலையும் கவனக்குவிப்பும் இதுவாக மாறாத போது நமது பூமியின் சுவனத்தீவு சாபத்திற்குரிய தேசமாய் மாறுவதை யாராலும் தடுக்கமுடியாது போய்விடும்.
.







No comments