Breaking News

எம்.எச்.றியாஸாவுக்கு பதவி உயர்வு

 


வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துவத்திற்குப் பொறுப்பாக கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற எம்.எச்.றியாஸா கல்வி நிருவாக சேவையில் இரண்டாந்தரத்திற்குப் பதவி உயர்வு பெற்றுள்ளதாகப் பொதுச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவியான திருமதி.எம்.எச்.றியாஸா மருதமுனையினைப் பிறப்பிடமாக் கொண்டவர். கலாநிதி மொஹம்மட் பைறோஸ், ஆசிரியரின் மனைவியும், மொஹம்மட் ஹாலித் - சித்தி அஸீஸா ஆகியோரின் புதல்வியுமாவார், 

மட்/செங்கலடி மத்திய கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக கல்விப் பணியில் இணைந்து கொண்ட இவர் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் தனது ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். தனது முயற்சியின் காரணமாக  கல்வி நிருவாக சேவையில் சித்தியடைந்த இவர், 16.06.2014 இல் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையில் உதவிக் கல்விப் பணிப்பாளராக இணைந்து கொண்டார். 

பின்னர் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளாராக கடமையாற்றுகிறார். இவர் தென்கிழக்குப்பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியுமாவார். அத்துடன் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் பட்டமேற் கல்வி  டிப்ளோமாவில் விசேட தரச் சித்தியனையும் தேசிய கல்வி நிறுவகத்தில்   பட்டமேற் கல்வி நிர்வாக டிப்ளோமாவினைக் கற்பதற்காக இணைந்து கொண்ட இவர், அதில் merit சித்தியினையும் பெற்று கல்விப் புலத்தில் தன்னை உயர்த்திக் கொண்டார். 

அத்துடன் உயிரியல் தொழிநுட்பவியலில் முது விஞ்ஞானமானி பட்டத்தினை அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் பெற்று சிறந்த கல்விமானாக சிறந்த நிருவாகியாக தன்னை மாற்றிக் கொண்டார். அறிவுத் தேடல், சிறந்த நிருவாகத் திறன் கொண்ட திருமதி.எம்.எச்.றியாஸா கல்வி நிருவாக சேவையில் இரண்டாந்தரத்திற்குப் பதவி உயர்வுபெற்றுள்ளமை பாராட்டத் தக்கதாகும்.(News Time Tamil)

No comments