Breaking News

மூதூரில் நடமாடும் சேவை.



மூதூர் பிரதேச செயலப் பிரிவில் இதுவரை பிறப்புச் சான்றிதழ் பெறாத, இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்காக மூதூர் பிரதேச செயலகத்தினால் நடமாடும் சேவை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடமாடும் சேவை  2021.02.17 ஆம் திகதி பாட்டாளிபுரம் பல்தேவைக் கட்டடத் தொகுதியிலும்  2021.02.18ஆம் திகதி மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்திலும் இடம்பெறவுள்ளது.   

இதுவரை பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்கள் தங்களிடமுள்ள ஆவணங்களோடு இந்நடமாடும் சேவையில் கலந்துகொணடு பயன்பெற முடியும்.

No comments