Breaking News

பதில் சுகாதார அமைச்சராக ஷன்ன ஜயசுமன.


சுகாதார பதில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக, இராஜாங்க  பேராசிரியர் ஷன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ஜபக்ஸவினால் இந்த நியமனம் சற்று முன்னர் வழங்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கடமைகளுக்கு மீண்டும் திரும்பும் வரை, ஷன்ன ஜயசுமன அந்த பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு முன்னெடுப்பார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தற்போது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையிலேயே, ஷன்ன ஜயசுமன, பதில் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்ச்சி மன்ற இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments