Breaking News

கூட்டுறவுச் சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா


மட்டக்களப்பு  மண்முனை மேற்கு  - ஈச்சந்தீவு கன்னங்குடா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்வு  இடம்பெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள ஈச்சந்தீவு கன்னங்குடா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்வு செவ்வாய்கிழமை (09) குட்டுறவுச் சங்க வளாகத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றது.


அதிதிகளால் மங்கல விளக்கேற்றி, கூட்டுறவு கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர என். உருத்திரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி. தங்கவேல், மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் போன்றார் கலந்து சிறப்பித்தனர்.மேலும் இந் நிகழ்வில், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.முருகேசப்பிள்ளை, மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி தலைமை அலுவலக அதிகாரிகள், பிரதேச கூட்டுறவு உத்தியோகத்தர் போன்றோரும் அதிதிகளாக கலநதுகொண்டனர். இதன்போது, 50வது ஆண்டு நிறையொட்டி   நடுகைக்கல் திரை நீககம் செய்யப்பட்டதுடன் மண்முனை மேற்கு கோட்டத்தில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி பாராட்டப்பட்டதுடன், கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த காலங்களில் பணியாற்றியோர் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


ஈச்சந்தீவு கன்னங்குடா பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஆரம்பிக்கபட்டு 50வது வருட நிறைவையொட்டு இடம்பெற்ற இந் நிகழ்வில் பொது முகாமையாளர் யோ. டிலானி, தலைவர் உருத்திரமூர்த்தி மற்றும் அதிதிகளால் 50வது ஆண்டு என பொறிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டு பொன்விழா நிகழ்வு  கொண்டாடப்பட்டது.

No comments