மாவனல்லை சிலை உடைப்பு நடந்தது எப்படி?
சஹ்ரான் காசிமின் முதற்கட்ட நடவடிக்கைகள் - தொடர் - 3
(தமிழில் ஏ.ஆர்.ஏ.பரீல்)
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி அதிகாலை அவருக்கு பயணம் ஒன்று செல்ல வேண்டி இருந்ததால் அன்று அவர் புத்தர் சிலை இருந்த அறையைத் திறந்து வைத்திருந்தார்.
25 ஆம் தேதி பூஜை வழிபாடுகள் வழமைபோல் நடைபெற்றன. மறுதினம் காலை அவர் பயணம் ஒன்று செல்ல வேண்டியிருந்ததால் அவர் காலை 3.30 மணிக்கும் 4.40 மணிக்கும் அலாரம் வைத்து இருந்தார். காலை 3.40 மணிக்கு அலாரம் ஒலி எழுப்பவே அவர் நித்திரையில் இருந்து எழுந்தார்.
அப்போது அவரது வீட்டில் இருந்து 30 - 40 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள புத்தர்சிலை பகுதியில் இருந்து சத்தம் ஒன்று கேட்டது
2018 டிசம்பர் மாதம் 22ஆம் தேதி ஜூன் மாதம் முதல் புத்தர் சிலை இருந்த அறையில் விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது.
என்றாலும் புத்தர் சிலையை தாக்குபவரை இனம் காணும் வகையில் சந்திரனின் ஒளி அப்போது இருந்தது. அவர் புத்தர்சிலை இருந்த அறையை நோக்கி ஓடினார். அங்கு மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்திருக்கும் ஒருவரை கண்டார்.
புத்தர் சிலையை தாக்கியவர் வந்து மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏறிக் கொண்டதும் இருவரும் கிராமத்தின் பாதை ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
விரைந்து செயற்பட்ட செனரத் பண்டார, சானக்க ஜெயரத்னாவை அப்போது அழைத்தார்.
உதவிக்கு வந்த கிராமவாசிகள் சிலரது உதவியுடன் புத்தர் சிலையை உடைப்பதில் சம்பந்தப்பட்ட அஸ்பாக் என்பவர் பிடிக்கப்பட்டார்.
இவர் கேகாலை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த கைதுதான் வனாத்தவில்லு வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருந்தது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால் அழிவுகளும் பாதிப்புகளும் இதனிலும் மேலாக அமைந்திருக்கும் என ஆணைக்குழு கருதுகிறது.
குற்றவாளியை மடக்கிப்பிடித்த செனரத் பண்டார, சானக ஜயர்தன இருவரதும் துணிச்சலான செயல் காரணமாக அவர்களை தேசிய வீரர்களாக அங்கிகரிக்கப்படுவதற்கு ஆணைக்குழு பரிந்துரை செய்கிறது.(தொடரும்)
www.newstimetamil






No comments