சேனையூர் பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான அங்குரார்ப்பண நிகழ்வு.
திருகோணமலை மாவட்ட சேனையூர் பகுதியில் ஆரம்பமாகவுள்ள சேனையூர் சிறி கணேசா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான போட்டிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு, சேனையூர் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று நேற்று (11) ஆரம்பமானது.
இத்தொடரில் ஐந்து அணிகள் பங்குபற்றுகின்றன.
ஆரம்ப நிகழ்வின்போது தொடரில் பங்குபற்றும் அணிகளின் சீருடை அறிமுகம், வெற்றிக் கிண்ணம் அறிமுகம் போன்றனவும் இடம்பெற்றன. அத்தோடு அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ஜே. ஜனார்த்தனன் கலந்து கொண்டார், சிறப்பு அதிதிகளாக, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ. அரூஸ், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி ஜெயமாலா, து.ஜெகன் மற்றும் சேனையூர் , கட்டைபறிச்சான், பிரதேசத்தின் பிரமுவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. www.newstimetamil.com










No comments