Breaking News

சாரண இயக்க மாணவர்களினால் பயணிகளுக்கான இருக்கைகள் வழங்கி வைப்பு .

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அமர்ந்து இளைபாருவதற்கான இருக்கைகள் இல்லாது பெரிதும் அவதியுற்ற நிலையில் தி / இ.கி.ச. ஸ்ரீ. சண்முகா இந்து மகளிர் கல்லூரி சாரணர் இயக்க மாணவிகளினால் திருகோணமலை மத்திய பேருந்து நிலையம் துப்பரவு செய்யப்பட்டு வர்ண பூச்சுகள் பூசப்பட்டு போக்குவரத்து பயணிகளுக்கான இருக்கைகள் உரிய அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை போக்குவரத்து சபை உதவி முகமையாளர்-ஜே.ஆர்.இந்திரசேன மற்றும் நகராட்சி மன்ற உறுப்பினர்- திருமதி.வி.இரத்னஜோதி தி  இ.கி.ச.ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர்-திருமதி.லி.ரவிராஜன்  திருகோணமலை மாவட்ட உதவி ஆணையாளர்- திரு.ர. சத்தியராஜன்சாரணர் ஆசிரியர் ஆலோசகர்- திரு.ந.அசோக்குமார் மற்றும் சாரண ஆசிரியர்கள் பெற்றோர்கள் திகோணமலை   இ.கி.ச.ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி சாரண மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments