Breaking News

முதலை இழுத்துச்சென்ற சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


முதலை இழுத்துச்சென்ற சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு பகுதியில் உள்ள இத்திக்குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது முதலை இழுத்துச்சென்ற சிறுவனின் சடலம் இன்று (28) மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (27) காலை குறித்த சிறுவன் இந்த குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, முதலை இழுத்துச் சென்றுள்ளது. இதனை குளிக்கச் சென்ற  மற்றைய சிறுவர் பார்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஊர் மக்கள் இராணுவத்தினரின் உதவியோடு, குறித்த சிறுவனின் உடலைத் தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையிலே, இன்று (28) உடல் அவர்களால் மீட்கப்பட்டது.



     


No comments