Breaking News

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையில் இருந்து ...

 


சந்தேக நபர்களை விடுவிக்க,

முஸ்லிம் அரசியல்வாதிகள் அழுத்தம் வழங்கினரா?  

தொடர் - 9 

-தமிழில் ஏ.ஆர்.ஏ.பரீல்-

அசாத் சாலி 2018 டிசம்பர் 26 ஆம் தேதி முற்பகல் 11.07க்கும் இரண்டாவது தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியதாகவும் தும்மலசூரிய போலீஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி சாட்சியம் அளித்தார்.

இந்த அழைப்பு 83 செக்கன்கள் நீடித்தன. அசாத்சாலி மீண்டும் சம்பவம் தொடர்பில் வினவிய உள்ளதுடன் விசாரணைகளின் நிலை பற்றியும் கேட்டுள்ளார்.

சாட்சியாளர் சந்தேகநபர்களை இனம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் வழங்கியுள்ளார். அசாத்சாலியின் தொடர்பாடல் மூலம் அவர்கள் மீது கொண்டுள்ள அக்கறை அவர் விசாரணை தெரியப்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் நான் உணர்ந்து கொண்டேன் எனவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.

அசாத்சாலியின் இவ்வாறான முயற்சி மற்றும் தலையீடு பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காகவே என போலீசார் கருதினார்கள். இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன

2019 ஏப்ரல் 23ஆம் தேதி ஒளிபரப்பான வாத பிரட்டிய (விவாத மேடை) நிகழ்ச்சியில் ஒரு பகுதி தொடர்பான சாட்சியம் விசாரணை ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டினை கலந்துரையாடுவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் அசாத்சாலி பங்கு கொண்டிருந்தனர்

இந்நிகழ்ச்சியில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சில பகுதிகள் பின்வருமாறு

49 ஆவது நிமிடம் 21 ஆவது செக்கனில் மௌலவி மற்றும் நபர் ஒருவர் Confrence call ஆரம்பித்திருக்கிறார்கள். மாவனல்லை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை போலீசாரிடம் கையளிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என அசாத்சாலி கூறுகிறார்.

50 ஆவது நிமிடத்தில் 40 ஆவது செக்கனில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு சந்தேகநபர்களின் தந்தையின் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தேன் என ஆசாத்சாலி தெரிவிக்கிறார்.

51ஆவது நிமிடம் 11ஆவது செக்கனில் புத்தளத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் அயலவரிடம் காணியில் இருந்து சம்பவத்தை பார்ப்பதற்கு வந்தவர் என்றும் மற்றவர் அவருக்கு உணவு கொண்டு வந்த இளைஞர் எனவும் அசாத்சாலி தெரிவிக்கிறார்.

51 ஆவது நிமிடம் 24 செக்கனில் இரு இளைஞர்கள் தொடர்பான விடயத்தை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேேசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் தான் கலந்துரையாடி உள்ளதாக அசாத்சாலி மேலும் தெரிவிக்கிறார்.

51 ஆவது நிமிடம் 30 செக்கனில் விசாரணைகள் முற்று பெரும் வரை எந்த ஒரு பரிசோதனையை மேற்கொள்ள கூடாது என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர பதில் வழங்கியுள்ளார்.

51ஆவது நம்மிடம் 37வது செக்கனில் காணியின் உரிமையாளர் மற்றும் அவருக்கு உணவு எடுத்து வந்த நபர் அப்பாவிகள் என அசாத்சாலி கூறுகிறார்.

51 ஆவது நிமிடம் 47 செக்கனில் சந்தேக நபர்கள் இருவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அசாத்சாலி தெரிவிக்கிறார்.

53வது நிமிடம் 37வது செக்கனில் சந்தேகநபர்கள் இருவர் விடுதலை செய்வதற்கு நீங்கள் தலையீடு செய்திருக்கிறார் என நிகழ்ச்சியை நடாத்தியவர் அசாத்சாலியிடம் வினவுகிறார்.

அப்போது அசாத்சாலி மாவனல்லை சம்பவத்தில் தப்பி ஓடிய சந்தேக நபர்கள் இருவர் மற்றும் வனத்தவில்லு காணி தொடர்பான விடுலை செய்யப்பட்ட இருவர் தற்கொலை குண்டுதாரிகள் அல்ல என பதிலளிக்கின்றார்.

ஒரு மணித்தியாலம் இரண்டாவது நிமிடம் 14 வது செக்கனில் தந்தை ஒரு பயங்கரவாதி அல்ல அவரது புதல்வர்கள் செய்த தவறு காரணமாக அவர் கைது செய்யப்பட்டார் என அசாத்சாலி தெரிவிக்கிறார்.

ஒரு மணித்தியாலம் 15 நிமிடம் 35வது செக்கனில் சந்தேகநபர்களின் தந்தையிடமிருந்து வாக்குமூலம் ஒன்று பதிவு செய்வதற்கு அவரை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோனிடம்  அழைத்து வருவதற்கு தன்னால் இயலும் என பொலிஸ் மா அதிபரிடம் அசாத்சாலி தெரிவிக்கின்றார்.

அரசியல்வாதியான அசாத் சாலி மேற்குறிப்பிட்ட விடயங்களை தலையிடாது இருந்திருக்க வேண்டும் என்பது விசாரணையில் நிலைப்பாடு.

இவ்வாறான நடவடிக்கையில் போலீசாரின் சுயாதீனமான விசாரணைகளுக்கு தடையாக அமையும் என்பதால் அரசியல்வாதிகள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

இஹ்சான் மொய்தீனை கைது செய்தமை தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுடன் கொண்டதன் காரணமாக அரசியல் தலைையீடு என்ற வாதம் மேலும் பலப்படுகின்றது. பாராளமன்ற உறுப்பின் ஒருவர் மாகாண சபை அல்லது 

உள்ளுராட்சி மன்ற பிரதிநிதி ஒருவரினால் பொலிஸ் விசாரணை மற்றும் பொலிஸ் கைதி அல்லது தடுப்புக்காவலில் தடுத்து வைத்திருக்கும் பயங்கரவாத சந்தேக நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளும் எவ்வித தலையீடும் குற்றச் செயலாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகள் தண்டனைக்குரிய குற்றங்கள் என அறிமுகப்படுத்துவதற்கு விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்கிறது. (தொடரும்) 

www.newstimetamil.com





No comments