ஏப்ரல் மாதத்திற்குள் வரையறை இன்றி இணைய வசதி..!
வரையறை இன்றி இணைய வலையமைப்பினை அறிமுகப்படுத்துமாறு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை கடந்த முதலாம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு தொலைத்தொடர்பு சேவையினை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய, தொலைத்தொடர்பு சேவையினை வழங்கும் அனைத்து நிறுவனங்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட தொகுப்புகளை மதிப்பீடு செய்யும் பணியில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு ஈடுபட்டு வருகின்றது.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள்குள் வரையறை இன்றி இணைய வசதிகளை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது






No comments