Breaking News

"உட்செல்லத் தடை" எனும் அறிவிப்பு பலகையால் குச்சவெளி மக்கள் அதிர்ச்சி

  


தொல்பொருள் எச்சங்கள் இருப்பதனால் பொதுமக்கள் உட்செல்லத் தடை எனும் அறிவிப்பு பலகையொன்று குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட  புல்மோட்டை பிரதான வீதி, தொடுவாய் எனும் இடத்தில் திடீரென நாட்டப்பட்டுள்ளமை தொடர்பில் குச்சவெளி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 50 ஆண்டுகளாக தமது பராமரிப்பில் இருந்த காணிகளை கபளீகரம் செய்யும்  முயற்சி இது என்றும், இந்த காணி அமைவிடத்தில் தொல்பொருளுக்கான எந்தவிதமான எச்சங்களும் புலப்படவில்லையென்றும், காடுகள் இல்லாத நிலப்பரப்காகவே, இது இருக்கின்றதென்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.


50 வருடங்களுக்கு மேலாக மக்களால் பராமரிக்கப்பட்டுவந்த குச்சவெளி ஜாயாநகர் சல்லிமுனை பகுதி குடியிருப்பு மாறும் விவசாய காணிகள் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்த்தால் அரச காணி என அடையாளமிடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக திருகோணமலை பாராளமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.


இதனை அடுத்து இன்று (3)காலை அப்பகுதிக்கு விஜயம் செய்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அப்பகுதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடினேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (www.newstimetamil.com)










No comments