Breaking News

ஆணைக்குழு அறிக்கை விவாதத்த்தில் முஸ்லிம் எம் பிக்கள் மெளனம்

 


உயர்ந்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக இம்மாதம் மூன்று தினங்களாக பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றிருந்தமை யாரும் அறிந்ததே.

ஆனால், இதில் முஸ்லிம் எம்பிக்கள், குறிப்பாக பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவோ அல்லது முஸ்லீம்கள் மீது ஏற்பட்டிருக்கின்ற  சந்தேகங்களை நிவர்த்தி செய்யவோ எந்தவிதமான அக்கறையும் ஏனோ காட்டவில்லை. 

ஆனால்,  முஸ்லிம்  சகோதரர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற தலைப்பில் செல்வம் அடைக்கலநாதன் தன்னுடைய நேரத்தில் பேசினார்.

முஸ்லிம் மக்களின் பொருளாதாரத்தை அழித்து ஏதிலிகளாக்கும் செயற்பாடே இடம்பெறுகின்றது என்ற தலைப்பில் செல்வராசா கஜேந்திரன் தன்னுடைய நேரத்தில் பேசினார். 

ஆணைக்குழு தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில்  அனைவருக்கும் அனைவருடைய மேசையில் வைக்கப்பட்டு பல நாளாகிவிட்டது. ஆனால் அந்த புத்தகத்தை இன்னும் திறந்து பார்க்காத முஸ்லிம் எம்.பிக்களும் இருப்பதாக தெரிய வருகிறது. 

அப்படி என்றால் எப்படி பேச வரும்? www.newstimetamil.com


No comments