Breaking News

கிண்ணியாவில் நடந்த விபத்தில் ஒருவர் பலி!


கிண்ணியா - கொழும்பு  வீதியில் முனைசேனை என்ற இடத்தில் இன்று (16) மாலை நடைபெற்ற விபத்தொன்றில்,  68 வயதான வயோதிபர் அதே இடத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

கிண்ணியா வில்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த 68 வயதான டெயிலர் நசீம் என்பவரே இவ்வாறு  பலியானவர் ஆவார்.

கிண்ணியாவில் இருந்து இவர் சிறியரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் வில்வெளியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






No comments