உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு அறிக்கையிலிருந்து...
சஹ்ரானின் ஆரம்ப நாட்கள்
தொடர் - 12
தமிழில் ஏ.ஆர்.ஏ.பரீல்
2015 ஏப்ரல் 15ஆம் தேதி காத்தான்குடியில் முஸ்லிம் நூதனசாலை ஒன்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளா வினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அபிவிருத்தி பணி இப்பகுதி முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள் நூதனசாலையில் இஸ்லாத்திற்கு முரணான சிலைகளும் நினைவு பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி அதை எதிர்த்தன
2015 ஜூலை 30ஆம் திகதி சஹ்ரானும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதினார். தங்களுடைய கோரிக்கைக்கு இணங்கினால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அத் தேர்தலில் ஆதரவளிக்கும் என்றும் அவ்வாறு இணங்காவிட்டால் எதிர்க்கும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிபந்தனைகள் தேர்தலில் போட்டியிடும் அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
அரசியலுக்காக சமயத்தை மறந்துவிட வேண்டாம் அரசியல் கூட்டங்களில் இசை நிகழ்ச்சிகள் வேண்டாம் என நிபந்தனைகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன
வேட்பாளர்களான சிப்லி பாரூக் (லங்கா முஸ்லிம் காங்கிரஸ்) எம்.எல்.ஏ எம்.ஹிஸ்புள்ளா (ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி) அப்துர் ரஹ்மான் (நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) ஆகியோர் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டிருந்தனர்
2015 ஆகஸ்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சஹ்ரான் குழுவினர் தந்திரமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினர்.
இந்தப் பிரச்சாரங்களுக்கு ஆதரவாக வார உரைகல் எனும் ஒரு இணையப் பத்திரிகையும் முகநூல் பக்கம் ஒன்றும் சஹ்ரான் குழுவினரால் நடத்தப்பட்டதுடன் அவை நியாஸ் என்பவரால் நிர்வகிக்கப்பட்டது.நியாஸ்
2019 ஏப்ரல் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தார்.
தேர்தல் நடந்து முடிந்ததும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனால்,ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள். கொண்டாட்டங்களின் போது தேசிய தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் தாக்கப்பட்டது. இதில் சஹ்ராகின் சகோதரர் றிழ்வானும் தாக்கப்பட்டு, தலையில் காயங்களுக்கு உள்ளானார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேலும் பலருடன் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த வீடியோ பதிவு ஒன்றினை ஆணைக்குழு பார்வையிட்டது. அந்த கூட்டத்தின் கலந்துரையாடலில் சஹ்ரானும் கலந்து கொண்டுள்ளார்.
ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டமையினால் அதன் சேத விபரங்களை பார்வையிடுவதற்காக அங்கு விஜயம் செய்ததாக றஆப் ஹக்கீம் விளக்கினார்.
றவூப் ஹக்கீமும் சிப்லி பாரூக்கும் றிழ்வானை மட்டக்களப்பு வைத்தியசாலையில் பார்வையிடச் என்பதற்கு சான்றாக உள்ள வீடியோ பதிவினையும் ஆணைக்குழு பார்வையிட்டது.
பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் பார்பதற்காகவே அங்கு சென்றதாக றவூப் ஹக்கீம் கூறினார். ஆனால் வீடியோ பதிவின் படி அவர்கள் முதலில் நிழ்வான் சிகிச்சை பெறுவதே பார்க்கச் சென்றுள்ளார்கள்.
அதன் பின்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சஹ்ரானுடனோ அவரது குழுவினருடனோ தொடர்பு கொண்டிருந்ததற்கான சாட்சியங்கள் அறியக் கிடைக்கவில்லை.
2016 ஆம் ஆண்டளவில் சாகரன் தனது முகநூல் பக்கத்தில் ஐ.எஸ் கொள்கைகளுக்கு சார்பான கருத்துக்களை பதிவிட ஆரம்பித்தார். முஸ்லிம் அல்லாதவர்களை கொலை செய்தல் போன்ற கொடிய செயல்களை தனது முகநூல் பதவியின் ஊடாக நியாயப்படுத்தினார்.
நெளபர் நவம்பர் 2016 இல் இலங்கை திரும்பினார். 2016 ஆகஸ்ட் அல்லது அக்டோபர் மாதத்தில் சஹ்ரானிடம் ஐ.எஸ் வீடியோ பதிவுகள் அடங்கிய பென் ட்ரைவ் ஒன்றினை கையளித்தார். அதில் எதிரிகளை எவ்வாறு சிரச் தேசம் செய்வது என்பது பதியப்பட்டிருந்தது.
2016 மார்ச் 4 ஆம் தேதி சஹ்ரான் மீராவோடை சந்தி வாழைச்சேனையில் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். ஷியா பிரிவினரால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் அவர்களால் மேற்கொள்ளப்படும் மேலும் பல செயற்பாடுகள் தொடர்பில் இங்கு விமர்சிக்கப்பட்டது
2016 ஜூலை 9 ஆம் தேதி சாகிர் நாயக் தொடர்பில் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுவரும் அறிக்கைகளை கண்டித்தார். Peace TV ஊடாக சாகிர் நாயக் இந்திய முஸ்லிம்களை தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் அவரது நிகழ்ச்சிகள் மூலம் ஊக்கப்படுத்துவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்து வந்தன. இதனை சஹ்ரான் கண்டித்தார்.
சாகிர் நாயக் இரு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவர் 2010 மே மாதம் 25ஆம் தேதி சுகததாச விளையாட்டரங்கில் மத போதனைகளை நடாத்தியுள்ளார். இந்த நிகழ்வில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
2011 ஜனவரி 4 ஆம் தேதி மட்டக்களப்பில் நடைபெற்ற அவரது நிகழ்வில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
2016 செப்டம்பர் 4ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவரது காரியாலயத்தில் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். அவரது காத்தான்குடி அலுவலகத்தில் இஸ்லாமிய இராச்சியம் மற்றும் இஸ்லாமிய தலைமைத்துவம் என்ற தலைப்பின் கீழ் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஹிஜ்ரத் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதாவது முஸ்லிமல்லாத நாட்டிலிருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு பயணிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. (தொடரும்)
www.newstimetamil.com.






No comments