இந்தோனேசிய தூதுவர் கிண்ணியா வருகை
ஜோர்தான் நாட்டுக்கான முன்னாள் தூதுவர் A.L.M.லாபிர் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான இந்தோனேசிய நாட்டின் தூதுவர் IGUSTI NGURAH
ARDIYASA இன்று கிண்ணியா வுக்கான நல்லெண்ண விஜயத்தை தனது தூதுக்குழுவு டன் மேற்கொண்டார்.
இதன் பொழுது கிண்ணியா ஜாவா முஸ்லிம்களின் வரலாறு, வாழ்வியல், உணவு பழக்கவழக்கங்கள், உடை ,மொழி தொடர்பான ஏராளமான விடயங்கள் அவருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் அவர்கள் வந்து இறங்கிய இடம் வசித்த பகுதிகள் என்பனவும் காண்பிக்கப்பட்டது.
கிண்ணியா ஜாவா பள்ளிவாயலில் இவர்களுக்கான விஷேட ஒன்றுகூடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ..
நீண்டகால கிண்ணியாவின் வரலாற்றுடன் ஜாவா மக்கள் நெருங்கிய உறவை கொண்டிருக்கின்றார்கள் ..
இந்த உறவை தொடர்வதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப் போவதாக இந்தோனேசிய நாட்டின் தூதுவர் தெளிவுபடுத்தினார்.
இந்த நிகழ்வில் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் S.H.நளீம், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி DR.A.M.M.அஜீத் தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் M.ஹபீபுள்ளாஹ்..
ஜாவா பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
கிண்ணியா,ஜாவா தொடர்பு பற்றி கிண்ணியா மஜ்லிஸ் அஸ் சூரா செயலாளர் M.S.M.நியாஸ் முன்வைப்புக்களை மேற்கொண்டிருந்தார்.








No comments