Breaking News

மூன்று குழந்தைகளும் சடலமாக மீட்பு!



கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தாயார் ஒருவர் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த சம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி என்ற பகுதியில் நேற்று (03) மாலை இடம்பெற்றது.

கிணற்றுக்குள் குதித்த தாயார் கிணற்றின் படிக்கற்களை பிடித்ததினால் உயிர் தப்பிக்கொண்டார். ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்திசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

ஏனைய குழந்தைகளை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது கிணற்றுக்குள் இருப்பது நேற்று இரவு தெரியவந்த பின்னர், இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் ரி. சரவணராஜாவின் முன்னிலையில் கடற்படையின் உதவியுடன் இரண்டு சிறார்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஒன்றரை வயதடைய கிருபாகரன் டேனேஸ், ஐந்து வயதுடைய கிருபாகரன் அக்சயா, எட்டு வயதுடைய கிருபாகரன் கிருத்திகா என்ற சிறார்களே பலியாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (தெரண)

No comments