அதிபர் இடமாற்றத்தில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை அதிபர் சேவை இடமாற்றத்துக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் வெளியிடப்பட்டுள்ள இடமாற்றம் மூலம் திருப்தி அடையாத பாதிக்கப்பட்டவர்கள் மாகாண கல்வி பணிப்பாளர் மூலம் மேன்முறையீடு செய்யலாம் என மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்ட இடமாற்ற சபைத் தலைவரை அப்பதவிக்கு நியமனம் செய்யக் கூடாது அவர் இப்பதவிக்கு தகுதியற்ற ஒருவர் என சுட்டிக் காட்டி கடுமையான எதிர்ப்பை தெரிவித்தபோதும், கிழக்குமாகாண கல்வி அமைச்சின் முன்னைய செயலாளர் இடமாற்ற சபைத் தலைவராக நியமித்தமையாலேயே இந்தநிலைமை ஏற்பட்டுள்ளது.
கல்முனை கல்வி வலய அதிபர்கள் திட்டமிட்ட உள்நோக்கத்தோடு மட்டக்களப்பு மத்தி, அக்கரைப்பற்று கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. ஆனால் அந்த வலயங்களிலிருந்து எந்த ஒரு அதிபரும் கல்முனை, அக்கரைப்பற்று வலயங்களுக்கு இடமாற்றப்படவில்லை.
எனவே உடனடியாக இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் தமது மேன்முறையீடுகளை அனுப்புமாறு தாம் கேட்டுக் கொள்வதாக மாகாணக் கல்வி பணிப்பாளர் நிசாம் தெரிவித்தார்.






No comments