Breaking News

குச்சவெளியில் மாபெரும் சிரமதான பணி.


இளைஞர்களினூடாக பிரதேசத்தை அழகு படுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் சிரமதானம்  

(முகம்மது றியாஸ்)

"இளைஞர்களினூடாக பிரதேசத்தை அழகு படுத்துவோம்" என்ற தொனிப்பொருளில் குச்சவெளி பிரதேசத்தின் கும்புறுப்பிட்டி தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் சிரமதான பணி ஒன்று இடம்பெற்றது.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் குச்சவெளி பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும்  "ஒன்றிணைவோம் இலங்கை " அமைப்பின் திருகோணமலை கிளைையும் இணைந்து இந்த இந்த சிரமதான பணியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக குச்சவெளி பிரதேச சபையின்  தவிசாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர், கும்புறுப்பிட்டி பிரதேச இராணுவ பொறுப்பதிகாரி, குச்சவெளி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி, திருகோணமலை மாவட்ட தேசிய பிரதிநிதி, குச்சவெளி பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர், குச்சவெளி பிரதேச முன்னாள் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவரும் ஒன்றிணைவோம் இலங்கை அமைப்பின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் தலைவர், தம்பலகாமம் பிரதேச முன்னாள் இளைஞர் கழக சம்மேளன தலைவர், குச்சவெளி பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள், ஒன்றிணைவோம் இலங்கை திருகோணமலை மாவட்ட Core Club உறுப்பினர்கள், திருகோணமலை ஈகை அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பிரதேச இளைஞர் யுவதிகள் உட்பட என பலரும் கலந்து கொண்டனர்.




No comments