Breaking News

துணுக்காய் பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வுகள்!


முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகத்தில் "நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று(10) மு.ப 9.30மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


பிரதேச செயலாளர் ஆ.லதுமீரா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலர், மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சித்த ஆயுர்வேத வைத்தியர், வலயக்கல்வி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments