Breaking News

கிழக்கு மாகாண வலைப்பந்தாட்ட அணியினருக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு.


(கியாஸ் ஷாபி) 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாணங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டி நாளை (7) கொழும்பில்  நடாத்தப்படவுள்ளது.


இந்த தேசியமட்ட போட்டிகளில் கலந்துகொள்ளும் கிழக்கு மாகாண அணியினருக்காக சீருடை மற்றும் பாதணிகள் வழங்கி, அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் வைபவம் இன்று (6) கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் என்.எம்.நெளபீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 






No comments