கோணேசப் பெருமானின் மகஹாசிவராத்திரி பெருவிழா.!
திருகோணமலை அருள் மிகு மாதுமையம்பாள் உடனுறை கோணேசப் பெருமானின் திருக்கோயிலில், 11.03.2021 வியாழக்கிழமை மகாசிவராத்திரி பெருவிழா, சமய அனுட்டானங்கள், நான்கு சாம அபிசேகங்களும், பூசைகளும் பின்வரும் நேர ஒழுங்கின்படி இடம்பெறும்.
1ம் சாம அபிசேகம் - மாலை 4.30 மணி, தொடர்ந்து பூசை
2ம் சாம அபிசேகம் - இரவு 8.30 மணி, தொடர்ந்து பூசை
3ம் சாம அபிசேகம் - இரவு 10 மணிக்குத் தொடங்கி (லிங்கோற்பவர் காலம்) நள்ளிரவு 12.00 மணி, தொடர்ந்து பூசை
4ம் சாம அபிசேகம் - அதிகாலை 4.00 மணி, தொடர்ந்து பூசை.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா_19 தாக்கங்கள் காரணமாக ஆலய நிர்வாகம் பக்தர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் விரதகாரர்களுக்கான தர்ப்பை அணிதல் நிகழ்வுகள் இடம் பெறமாட்டாது.
ஆலயத்தில் நீண்ட நேரம் தரித்திருந்து வழிபாட்டினை மேற்கொள்ளலை தவிர்க்கவும் மாலை 05.00 முதல் நள்ளிரவு 11.00 மணிவரை லிங்கோற்ப முன் லிங்கத்திற்கு தீர்த்தம் வார்க்கலாம். அனைவரும் கட்டாயம் முக கவசங்களை அணிந்திருத்தல் வேண்டும்.
இம்முறை கலைநிகழ்வுகள் இடம் பெறமாட்டாது. உங்கள் சுகாதார பாதுகாப்பிற்கு நீங்களே பொறுப்புக்குரியவர்.
சுகாதாரத் துறையினரதும், பாதுகாப்பு துறையினரதும் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்
சிவராத்திரி தினத்தன்று அடியவர்கள் வழங்கும் ஒத்துழைப்பைப் பொறுத்தே, மறுநாள் 12.03.2021 அன்று, பெருமானின் நகர்வலம் சிறப்பாக நடைபெற பேருதவியாக இருக்கும் என்பதை அனைவரும் சிந்தித்து செயல்படவும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.(www.newstimetamil)








No comments