Breaking News

கிண்ணியாவில் மூன்று ஆசிரியர்களுக்கு கொரோனா!

 

(கியாஸ் ஷாபி)

கொரோனா அச்சம் காரணமாக கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் இன்று (29)பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி சென்றமையை அவதானிக்க முடிந்தது.

இதன் காரணமாக இன்று பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மாதம் ஆரம்பத்தில் இந்த பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து நேற்று இப்பாடசாலையின் மூன்று ஆசிரியர்கள் PCR பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இதனையடுத்தே இன்று  வருகை தந்த மாணவிகள் அனைவரும் பாடசாலைக்குள் பிரவேசிக்காது, மீண்டும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.

எனினும்  மாகாண கல்வி திணைக்களத்தால்  நடாத்தப்படுகின்ற பரீட்சைக்கு  தரம் 11 மாணவிகள் மாத்திரமே இன்று பாடசாலைக்குள் பிரவேசித்தனர். 

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட  தரம்11இல் கல்வி கற்கின்ற  மாணவி ஒருவர், சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  





No comments