சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
எப்.முபாரக்
நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்காக நிலாவெளி பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் 13 வயதுச் சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் 35 வயதுடைய இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






No comments