மாவனல்லை சிலை உடைப்பு நடந்தது எப்படி? தொடர் -1
சஹ்ரான் காசிமின் முதற்கட்ட நடவடிக்கைகள் - 1
(தமிழில் ஏ.ஆர்.ஏ.பரீல்)
மாவனல்லை மற்றும் வேறு பகுதிகளில் புத்தர் சிலைக்கு சேதங்கள் விளைவிக்கப்பட்டன. இதனால் இப்பிரதேசங்களில் சமயங்களுக்கிடையில் முரண்பாடுகள் அதிகமாயின.மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகளுக்கு சேதங்களை ஏற்படுத்துமாறு சஹ்ரானினால் சாதிக் மற்றும் சாஹிதுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்களுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி 24ஆம் இலக்க கிராம அதிகாரி பிரிவில் ரந்திவெல சந்தியில் அமைந்திருந்த புத்தர்சிலை தாக்கப்பட்டது. இதுவே ஆரம்பமாகும். சிலையின் முகம் சிதைவுக்கு உள்ளானது சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் இருக்கவில்லை. சிங்களவர்களை திருமணம் செய்திருந்த 2 தமிழ் தமிழ் பெண்களைத் தவிர அனைவரும் சிங்களவர்களாகும். என்றாலும் முஸ்லிம்களும் சிங்கள மக்களும் ஒன்றாக வாழும் கிராமம் ஒன்று அப்பகுதி எல்லையில் அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 7 கிலோ மீற்றருக்கு அப்பால் மிரிஸ்குடு சந்தியில் மேலும் ஒரு புத்தர் சிலையும் தாக்கப்பட்டது (தொடரும்)






No comments