மாவனல்லை சிலை உடைப்பு நடந்தது எப்படி? தொடர் -2
அன்று 4.30 க்கும் 4.45 க்கும் இடையில் மாவனல்லை, கலவிதபுதென திதுலவத்தையில் அமைந்திருந்த புத்தர் சிலையும் சேதமாக்கப்பட்டது. அச்சிலை வரகாபானே 26/A கிராம அதிகாரி பிரிவில் அமைந்திருந்தது. இங்கு முஸ்லிம்கள் இருக்கவில்லை. என்றாலும் முன்னைய சந்தர்ப்பங்களை போலன்றி ஒரு தாக்குதல்தாரி இரு கிராமவாசிகளால் அடைக்கப்பட்டிருந்தார். முச்சக்கரவண்டி சாரதியான செனரத் பண்டார தாக்குதலுக்குள்ளான புத்தர் சிலைக்கு அருகில் வாழ்ந்தவராவார்.
புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டினது திறப்பு அவரது முச்சக்கரவண்டி சாவி உடனே தொங்கவிடப்பட்டிருந்தது. இரவில் அவர் வீட்டுக்கு வந்ததன் பின்பு, முன்னைய தினம் புத்தர் சிலைக்கு பூஜை வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்றுவது வழமையாகும்.
முச்சக்கர வண்டி சாரதி காலையில் வாடகை பணம் செலுத்த வேண்டி இருந்ததால் முன்னைய தினம் இரவே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள அறையைப் பூட்டி வைப்பார். இவ்வாறு பூட்டி வைக்கப்பட்ட ஒரு தினம் மக்கள் பூஜை வழிபாடுகள் செய்ய முடியாது சிரமங்களுக்கு உள்ளாகி இருந்தனர். (தொடரும்)






No comments